”வயிறு பற்றி எரிகிறது”, சொல்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்
Posted: Tue,13 Feb 2018 02:58:21 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசும் போது, “பாதுகாக்கப்படவேண்டிய மீனாட்சி அம்மன் கோயில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மண்டபம் கருகியுள்ளதை பார்க்கும் போது வயிறு பற்றி எரிகிறது. இது மன்னிக்க முடியாத குற்றம். பாதுகாப்பு நடவடிக்கையின் சிஸ்டம் சரியில்லை.பிளாஸ்டிக் பொருட்கள், குடங்கள் விற்பனை செய்யப்படும் வியாபார தலமாக கோயில் கடைகள் உள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.இது நிர்வாக சீர்கேடு. தவறு செய்தவர்களை கண்டுபிடியுங்கள். தண்டியுங்கள். அறநிலையத்துறை அறன் இல்லாத துறையாகவும் பக்தர்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் துறையாக உள்ளது. கடைகளுக்கு ஒப்பந்தமிட்டு அவை மாற்று மதத்தினருக்கும், இறை உணர்வு இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுஉள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும். இங்குள்ள சிலைகள், கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்க வேண்டும். வருங்காலங்களில் இது போல் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.இந்து மதத்திற்கு, இந்து கோயில்களுக்கு கேடு வந்துள்ளது. கோயிலை அறநிலையத்துறையால் பாதுகாக்க முடியவில்லை எனில் பா.ஜ., பக்தர்கள் இயக்கங்களால் பாதுகாக்கப்படும். விபத்து குறித்து எதிர்கட்சிகள் வாய்திறக்கவில்லை. இதை மக்கள் உணர வேண்டும். பக்தர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)