Posted: Tue,13 Feb 2018 02:56:53 GMT
கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொப்பல் மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற, ஹுலிகம்மா கோவிலில் வழிபாடு நடத்தி, தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கியுள்ளார். அத்துடன் ராய்ச்சூரில் உள்ள தர்காவுக்கும் சென்று பிரார்த்தனை நடத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், “காங்கிரஸ்தலைவராக பொறுப்பேற்ற ராகுல், டெல்லியில் எந்த ஒரு கோயிலுக்கும், மசூதிக்கும் சென்று பிரார்த்தனை செய்ததாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில்குஜராத்தை காப்பியடித்து கர்நாடகாவில் கோயில் கோயிலாக செல்லும் ராகுலின் போலி மத வேஷம் கர்நாடக மக்களிடம் எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this