பத்மாவத் படத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்
Posted: Tue,13 Feb 2018 01:16:17 GMT
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகி 300 கோடிகள் வரை வசூல் செய்துள்ள படம் பத்மாவத். பல்வேறு போராட்டங்களுக்குப்பின் வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் ரஜபுத்திர ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்ததாக கூறி பல்வேறு ரஜபுத்திர அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன.
இந்நிலையில் படம் வெளியான பிறகு, படத்தை பார்த்த கர்ணி சேனா அமைப்பு தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றதாக செய்திகள் வெளியானது. ஆனால் இச்செய்திகளை அந்த அமைப்பு மறுத்துள்ளது.
இது குறித்து கர்ணி சேனா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ “பத்மாவத் படத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். பத்மாவத் படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்ற கடிதம் எங்களுடையது இல்லை” , என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் ஏறக்குறைய நான்கு வாரங்கள் ஓடி வசூல் செய்துவிட்ட நிலையில் திரையரங்கைவிட்டு வெளியேறவும் ஆரம்பித்துவிட்ட நிலையில் இன்னும் யாரை எதிர்த்து போராடுகிறார்கள் என்று தெரியவில்லை.
  • Share
  • 0 Comment(s)