Posted: Tue,13 Feb 2018 01:14:18 GMT
2014ம் ஆண்டு வினோத் இயக்கத்தில் நட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சதுரங்க வேட்டை. இப்படத்தை நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரித்திருந்தார்.
தற்போது சதுரங்க வேட்டை 2, என்ற பெயரில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் மனோபாலா. இப்படத்துக்கு கதை வசனம் வினோத் எழுத, புதுமுக இயக்குனர் நிர்மல் குமார் இயக்குகிறார்.
இப்படத்தில் அரவிந்சாமி, த்ரிஷா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்னமும் அரவிந்த்சாமிக்கு சேரவேண்டிய சம்பளத்தொகையை கொடுக்காததால், அவர் மறு வாய்மொழி ஆக்கத்துக்கு வர மறுக்கிறாராம். நிதி சிக்கலில் இருக்கும் மனோபாலாவால் அரவிந்த்சாமியின் சம்பளத்தை தரமுடியவில்லையாம். இதன் காரணமாக படத்தில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this