கண்களால் கைது செய்த பிரியா வாரியார்
Posted: Tue,13 Feb 2018 01:11:47 GMT
ஓமர் லுலு இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் மலையாளத்தில் தயாராகிவரும் படம் ‘ஒரு அடார் லவ்' . இப்படத்தில் இடம் பெறும் 'மாணிக்ய மலராய பூவி' என்ற பாடலை நடிகரும் இயக்குனருமான வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார்.
இப்பாடலின் காணொளி சில நாட்களுக்கு முன்பு யூடியூபில் வெளியிடப்பட்டது. அக்காணொளியில் நடித்திருந்த பிரியா வாரியர் தன் புருவங்களை அசைப்பது மற்றும் கண்ணால் ஜாடை காட்டுவது போன்ற பாவனைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் கூகுல் வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளார் பிரியா வாரியார். இதன் காரணமாக பிரியாவுக்கு பல பட வாய்ப்புகள் கதவை தட்ட தொடங்கி இருக்கிறதாம். தமிழிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் பிரியா வாரியார்.
  • Share
  • 0 Comment(s)