அனிருத்தின் காதல் ஜூலி
Posted: Tue,13 Feb 2018 01:08:24 GMT
சிறப்பான தினங்கள், மற்றும் சிறப்பான விசயங்கள் என பல்வேறு வகையிலும் சிறப்பு இசை தொகுப்பை வெளியிடும் வழக்கத்தை கொண்டிருக்கும் அனிருத், இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஜூலி என்ற இசை ஆல்பத்தை வெளியிட உள்ளார்.
இன்று மாலை வெளியாகவிருக்கும் இந்த இசை தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் அனிருத்.
ஜூலி என்பது ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டு நய்யாண்டி செய்யப்பட்ட பெயர் என்பதால் இப்பெயரை வைத்துள்ளாரா அல்லது வேறு ஏதாவது சிறப்பு காரணம் இருக்கிறதா என்று இசை தொகுப்பு வெளியான பின்புதான் தெரியும்.
  • Share
  • 0 Comment(s)