நிதிநிலை அறிக்கையை குறை கூறும் நிடி அயோக் துணைத்தலைவர்
Posted: Tue,13 Feb 2018 08:34:56 GMT
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய அரசின் மத்திய நிதி நிலை அறிக்கை மீது எதிர்கட்சிகள் குறைகளை சொல்லி வந்த நிலையில், அரசின் நிடி அயோக் அமைப்பின் துணைத்தலைவரும் நிதிநிலை அறிக்கை குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிடி அயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், “நாங்கள் நினைத்ததைப் போல் மேக் இன் இந்தியா வெற்றி அடையவில்லை. இதன் காரணமாகப் பட்ஜெட் அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியும் விதித்து உள்நாட்டுத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் பொருளாதார ஆலோசனை குழுவில் இருக்கும் 4 உறுப்பினர்களில் இரண்டு பேர் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுக்குறித்த கருத்துக்கள் பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)