மோகன்பகவத் சர்ச்சை பேச்சு: ஆர்.எஸ்.எஸ் விளக்கம்
Posted: Tue,13 Feb 2018 08:33:22 GMT
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்பேசும் போது, “போர் வந்தால், அதற்கு தயாராக ராணுவத்துக்கு 6 மாதங்கள் ஆகும் ஆனால் நாங்கள் 3 மாதங்களில் தயாராகிவிடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
மோகன் பகவத்தின் இப்பேச்சு ராணுவத்தினரை புண்படுத்துவதாக இருக்கிறது என பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மோகன் பகவத்தின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோகன் பகவத் போர் வந்தால் ராணுவம் மக்களை அதற்கு ஏற்ப தயார் செய்ய 6 மாதங்கள் ஆகும ஆனால் ஆர்எஸ்எஸ் 3 மாதத்தில் தயாராகிவிடும் என்ற அர்தத்தில் தான் சொன்னார்.
மோகன் பகவத் ராணுவத்தையும் ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிடவில்லை. அவர் ஆர்எஸ்எஸ், பொதுமக்களை ஒப்பிட்டு தான் அந்த கருத்தை கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)