முதல்வரை சந்தித்த ஸ்டாலின்
Posted: Tue,13 Feb 2018 08:31:20 GMT
அரசு போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது தொடர்பான திமுகவின் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று மதியம் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ போக்குவரத்து கழகத்தை எப்படி சீரமைப்பது குறித்து ஆராய திமுக சார்பில் குழு அமைப்பட்ட குழு 27 பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பஸ் கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை.
இந்த அறிக்கையின்படி, போக்குவரத்து கழகத்தை மக்களின் சேவையாக கருதி நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும்.டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும். ஒரே சீரான 10 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும். டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நல்லிணக்க கூட்டம் நடத்த வேண்டும். பஸ்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளோம்
முதல்வருடனான சந்திப்பின் போது, துணை முதல்வர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் இருந்தனர். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளோம். அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. பார்ப்போம் என கூறியுள்ளனர். அரசு நிர்வாகம் செயல்படாத நிலையில் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் யோசனை கூறியுள்ளோம் எங்கள் பரிந்துரைகளை செயல்படுத்தனால், வரவேற்போம். இல்லாதபட்சத்தில், தேவைப்பட்டால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம். பொருட்கள் கட்டுமானத்தில் கமிஷன் வாங்குவதை கட்டுபடுத்தினால் கடனை குறைக்க முடியும்.” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)