பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த காஷ்மீர் முதல்வர் கோரிக்கை
Posted: Tue,13 Feb 2018 08:30:16 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்தி நிலவ வேண்டுமானால் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா, “ நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்கள் இப்போது செய்தியாக தெரிகின்றனர். இவர்களால் காஷ்மீர் மக்கள் துன்பபடுகின்றனர். காஷ்மீரில் இனியும் ரத்த ஆறு ஒடாமல் இருக்க வேண்டுமாயின் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகிறது. ஏனெனில் போரை தேர்தெடுப்பது அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)