இயற்கை பேரிடர்: அனுமன் ஸ்தோத்திரம் சொல்லுமாறு வலியுறுத்தும் பாஜக பிரம்முகர்
Posted: Tue,13 Feb 2018 08:29:07 GMT
மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர்களின் முக்கியமானவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் சக்சேனா, இயற்கை சீற்றகளில் இருந்து காத்து கொள்ள அனுமன் ஸ்தோத்திரம் சொல்லுமாறு மக்களை கேட்டுகொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி, மேற்குவங்கம்ல சி்க்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், ஹரியானா வடக்கு, பஞ்சாப் , ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், விதர்பா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இயற்கை பேரிடர் குறித்து தெரிவித்திருக்கும் ரமேஷ் சக்‌ஷேனா, “விவசாயிகள், தினமும் 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிவந்தால், இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை மற்றும் தங்கள் விவசாய சொத்துக்களை காத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியளிக்கிறேன். இளைஞர்கள், அடுத்த 5 நாட்களுக்கு தினசரி 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் கூறுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)