Posted: Mon,12 Feb 2018 06:25:28 GMT
மிஷ்கின் எழுதி, தயாரித்து, நடித்திருக்கும் படம் சவரக்கத்தி. இப்படத்தின் நாயகனாக இயக்குனர் ராம் நடிக்க, நாயகியாக பூர்ணா நடித்துள்ளார். மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார்.
மிஷ்கினின் வழக்கமான பாணியில் வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் முதல் மூன்று நாட்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 60 லட்சங்கள் வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து 1.90 கோடிகள் வசூல் செய்துள்ளது. முதல் மூன்று நாட்களில் 2 கோடிகளை கூட தாண்டாத காரணத்தால் இப்படம் தோல்வி என்று கணக்கிட்டு விட முடியாது, ஏனென்றால் இப்படத்தின் மொத்த செலவு 1.50 கோடிகளுக்கும் கீழேதான். எனவே இப்படம் லாபமான படம் என்றே கருதப்படுகிறது. மேலும் சென்னையில் வார நாட்களிலும் இப்படத்துக்கு வரவேற்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், மேலும் 50 லட்சம் வரை சென்னையில் மட்டும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 0 Comment(s)
Be the first person to like this