இணையத்தில் கசிந்தது காலா
Posted: Mon,12 Feb 2018 06:24:49 GMT
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகிவரும் படம் காலா. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் படத்தின் குறு முன்னோட்டத்தை வெளியிடும் யோசனையில் படக்குழு இருந்த நிலையில், இப்படதின் சண்டைகாட்சி இணையத்தில் கசிந்துள்ளது.
ஓரிரு விநாடிகள் ஓடும் இந்த சண்டை காட்சி, குறு முன்னோட்டத்தில் இடம் பெற்றிருந்த சண்டை காட்சி என தெரிய வந்துள்ளது. குறு முன்னோட்டத்தின் பணிகள் நடைபெற்று வந்த ஒரு இடத்தில் இருந்துதான் இக்காட்சி கசிந்திருக்கும் என்பதால், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது படக்குழு.
  • Share
  • 0 Comment(s)