ரயில்வே பிரிந்ததும் சேர்ந்ததும்
Posted: Mon,12 Feb 2018 06:23:58 GMT
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களுடைய வணிகத்துக்கு மிகவும் நம்பி இருந்தது ரயில்வே துறையை. இந்தியாவின் பல்வெறு பகுதிகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை இங்கிலாந்துக்கு அனுப்ப துறைமுகங்களுக்கு கொண்டு செல்லவும், அதே போல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நாட்டில் பல்வேறு பகுதிகளிக்கு கொண்டு செல்லவும் ரயில்வே மிகவும் பயன்பட்டது.
இதன் காரணமாக ரயில்வே துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முறை 1924ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதற்கு முன் ஒன்றாக இருந்த பட்ஜெட் ரயில்வே பட்ஜெட் என்றும் பொது பட்ஜெட் என்றும் பிரிக்கப்பட்டது.
93 ஆண்டுகளாக இருந்த இந்த நடைமுறை சென்ற ஆண்டு மாற்றப்பட்டு பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவை இணைக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
  • Share
  • 0 Comment(s)