Posted: Mon,12 Feb 2018 06:22:57 GMT
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – நான்கு குவளை
உரித்து வேகவைத்த பட்டாணி – 100 கிராம்
வேகவைத்து உரித்த உருளை கிழங்கு – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் - 1/4 தேனீர் கரண்டி
மல்லி தூள் - 1/2 தேனீர் கரண்டி
கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
வேகவைத்து உரித்த உருளை கிழங்குடன், உரித்து வேகவைத்த பட்டாணியை சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெட்டி வைக்கப்பட்ட சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் உருளை கிழங்கு, பட்டாணி கலவையை சேர்த்து கிளறவும். மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும், மல்லி இலையை தூவி இறக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அதன் மேல் தயார் செய்து வைத்துள்ளா மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்தவுடன் சுவையான சாம்பாருடன் மசாலா இட்லியை பரிமாறவும்.
  • 0 Comment(s)
Be the first person to like this