கலகலப்பு 2 வசூல் நிலவரம்
Posted: Mon,12 Feb 2018 06:10:25 GMT
சுந்தர் சி இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் கலகலப்பு. தற்போது இப்படதின் இரண்டாம் பாகமாக கலகலப்பு 2 வெளியாகியுள்ளது.
கலகலப்பு முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் அவ்வளவு சிறப்பாக இல்லை என விமர்சனங்கள் வந்திருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல நிலையில் உள்ளது கலகலப்பு 2. சென்னை நகரில் முதல் மூன்று நாட்களில் 1.50 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து 6 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.
ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரேசா, யோகிபாபு, சிங்க முத்து, மனோபாலா என ஒரு நட்சட்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. குஷ்பு இப்படத்தை தயாரித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)