முன்னேற்றத்துக்கு பக்கோடா அவசியம்: குஜராத் முன்னாள் முதல்வர் கருத்து
Posted: Mon,12 Feb 2018 03:46:55 GMT
பக்கோடா விற்பது சிறந்த வேலை என்ற ரீதியில் மோடி கருத்து சொல்ல அதற்கு எதிர் கருத்துக்களும், ஆதரவுக்கருத்துக்களும் என இந்தியாவில் தற்போது பக்கோடா அரசியல் நடைபெற்று வருகிறது.
மோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கும் குஜராத் முன்னால் முதல்வர் ஆனந்தி பென் படேல், “ பக்கோடா விற்பது குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்; அதில் எந்த நியாயமும் இல்லை.
உண்மையில், பக்கோடா தயாரிப்பது என்பது ஒரு கலை. நல்ல முறையில், நல்ல சுவையாக பக்கோடா தயாரிக்காவிட்டால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஒருவர் நல்ல பக்கோடா தயாரித்தால், முதல் இரண்டு ஆண்டுகளில் நல்ல வியாபாரம் நடக்கும்.மூன்றாவது ஆண்டில் சொந்தமாக ஓட்டல் திறக்கும் அளவுக்கு முன்னேற முடியும். நான்காவது ஆண்டில் மேலும் ஒரு ஓட்டலை திறக்கும் அளவுக்கு வளர்ச்சி காண முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)