பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கை
Posted: Mon,12 Feb 2018 03:43:57 GMT
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசுக்கான நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடும் விழா கோவையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், “இந்த நிழல் நிதிநிலை அறிக்கையின் மையக் கருவே நீர் பாசன திட்டம்தான். மற்ற மாநிலங்கள் வேளாண்மையில் சாதனை படைக்க முக்கிய காரணம் பாசன வசதிகள்தான். மத்திய பிரதேசத்தில் வேளாண் வளர்ச்சி, 27 சதவீதம், தெலுங்கானாவில், 19 சதவீதம் என்ற நிலையில் தமிழகத்தில் மைனஸ், 8 சதவீதமாக உள்ளது. இங்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை, நீர்வள மேலாண்மை என நான்கு துறைகளை உருவாக்க வேண்டும். வேளாண் வளர்ச்சி, 5 சதவீதம் எட்டுவதுதான் எங்கள் இலக்கு,” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி “ ''தமிழகத்தை பொறுத்தவரை நீர் பாசன திட்டத்திற்கு ஆண்டுதோறும், 25 ஆயிரம் கோடி என, நான்காண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். மற்ற மாநிலங்களை போல் இங்கும் நீர்ப்பாசனத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொள்முதல் நிலையங்கள் உருவாக்குதல், தனி வாரியம் அமைத்தல், புதிதாக மூன்று வேளாண் பல்கலைகள் துவங்குதல், எட்டு வேளாண் கல்லுாரிகள் துவங்குதல், வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகியவற்றை இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளோம். இந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.
  • Share
  • 0 Comment(s)