பின்னால் பார்த்து வாகனம் ஓட்டும் மோடி: ராகுல் காந்தி கிண்டல்
Posted: Mon,12 Feb 2018 03:41:37 GMT
கர்நாடக மாநில தேர்தல் களத்தில் ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். பெல்லாரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், “ பிரதமர் மோடி, நாட்டின் எதிர்காலம் மற்றும் கட்சியின் வருங்காலம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளாமல், காங்கிரஸ் கட்சியின் மீது குற்றஞ்சாட்டுதலிலே கவனம் செலுத்திவருகிறார். இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல...
தனது ஆட்சியின் முந்தைய சாதனைகளையே, பிரதம்ர மோடி தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறார். இத்துடன் தனது ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்துவிட்டாரோ என்னவோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி எனும் வாகனத்தை, தன்னுடைய ஆட்சியின் முந்தைய சாதனைகள் எனும் பின்புற கண்ணாடியை பார்த்துக்கொண்டே இயக்குவதால், விபத்துக்கள் ஏற்பட்டு நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாகனத்தையை முன்னோக்கி பார்த்து ஓட்டினால் மட்டுமே, குறித்த இடத்திற்கு சரியான நேரத்தில் செல்லமுடியும் என்று இருக்கையில், பிரதமர் மோடி, ஆட்சி எனும் வாகனத்தை தனது ஆட்சியின் முந்தைய சாதனைகள் எனும் பின்புற கண்ணாடியை பார்த்தவாறே முன்னோக்கி இயக்குகிறார். இது விபத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.” என்று மோடியை நய்யாண்டி செய்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)