Posted: Mon,12 Feb 2018 03:40:37 GMT
தமிழக அரசியலில் களமிறங்க கமல்ஹாசனும் ரஜினியும் தங்கள் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஒரு சிலர் இருவரும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் கமல்ஹாசன் சமீபத்தில் பேசி இருப்பதை பார்த்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு. ஆனால், ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. ரஜினியின் கொள்கை காவியாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அவரது அரசியல் நிறம் காவியாக இருந்தால் அவருடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி, தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று தெரிவித்திருந்ததை குறிப்பிட்டே கமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this