
தமிழக சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறப்பது, சட்டவிதிகளுக்கு முரணானது; இது ஒரு கருப்பு நடவடிக்கை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதாவையும் சேர்த்து நான்குபேர் குற்றவாளிகள் என, தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளனர். முதல் குற்றவாளியான ஜெயலலிதாஇறந்து விட்டதால் சிறைக்கு செல்லவில்லையே தவிர குற்றவாளி என்பதில் மாற்றமில்லை. எனவே திறப்பு விழாவில், தி.மு.க., பங்கேற்காது. ” என்று தெரிவித்திருந்தார்.