மழையால் வெற்றி வாய்பை இழந்த இந்திய கிரிக்கெட் அணி
Posted: Mon,12 Feb 2018 03:37:30 GMT
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஆறு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நான்காவது போட்டியில் மழையின் காரணமாக வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி, 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை இந்தியா எடுத்தது.
மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்ட காரணத்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்டது. இந்த இலக்கை எளிதாக எட்டி, நான்காவது போட்டியை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 3 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
  • Share
  • 0 Comment(s)