இந்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒரே பெண்
Posted: Mon,12 Feb 2018 10:03:57 GMT
இதுவரை பல நிதியமைச்சர்கள் இந்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அவர்களில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பெண் ஒருவர் இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
1970 - 71ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இந்திரா காந்தி தாக்கல் செய்தார். அதற்கு முன்பும், அதற்குப்பின் இதுவரையிலும் வேறு பெண் ஒருவர் இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை.
பிரதமராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு துறைகளை தன் வசம் வைத்திருந்த இந்திரா காந்தி, 1969 ஜுலை முதல் 1970 ஜூன் வரை நிதித்துறையை தன் வசம் வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • Share
  • 0 Comment(s)