”பக்கோடா விற்பது தவறல்ல”, தமிழிசை கருத்து
Posted: Thu,08 Feb 2018 02:06:19 GMT
திருச்சியில் நடைபெற்ற பாஜகவின் கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் ஆற்றிவரும் எதிர்வினை சரியானது அல்ல; அதன் உச்ச கட்டமாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பக்கோடா விற்பது போல நடந்துகொண்டது முறையற்ற செயல்” என்று கூறினார்.
மேலும், “சுயதொழில் செய்வது எப்போதும் கேலிக்குரியது அல்ல. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, செய்ய வேண்டியதை சிறப்பாக செய்து இருந்தால் தற்போது இந்த நிலை நமது நாட்டிற்கு வந்து இருக்காது” என்றும் தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)