அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்
Posted: Thu,08 Feb 2018 11:49:17 GMT
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேறூன்றி ஒரு பழமொழி உண்டு, அதாவது எங்கு இடம் கிடைத்தாலும் அங்கு வேர் பரப்பி செழித்து வளரும் தன்மை அருகம்புல்லுக்கு உண்டு.
அந்த அருகு வேர் பரப்புவது போல ஏராள நன்மைகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. அருகம் புல் சாறை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது, அதே சமயம் அதிகாலையில் சாப்பிடாமல், உடற்பயிற்சி செய்த பிறகு லேசாக பசி எடுக்கும் சமயத்தில் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள எல்லா கழிவுகள், விஷங்கள் நீங்கி உடல் நோய்கள் இல்லாமல் இருக்கும்.
உடல் எடையை குறைக்க பல்வேறு மருத்துவங்கள் தற்போது செய்யப்படு வரும் நிலயில், உடல் எடையை குறைக்க, கொழுப்பை குறைக்க அருகு சிறந்த மருத்து, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும்.
  • Share
  • 0 Comment(s)