கமல்ஹாசனுக்கு அதிகரிக்கும் ஆதரவு
Posted: Thu,08 Feb 2018 11:48:03 GMT
சில மாதங்களுக்கு முன்பு தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று கமல்ஹாசன் அறிவித்த போது, சிலர் நம்பவில்லை, பலர் கேலி பேசினார்கள். ஆனால் கமல்ஹாசன் எது பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய அரசியல் நகர்வை அரங்கேற்றி வருகிறார்.
இடையே ரஜினியும் அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று அறிவித்தபோது ரஜினிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதுபோன்றும் கமல்ஹாசனுக்கு குறைவான ஆதரவே இருப்பது போலவும் ஊடகங்கள் செய்திவெளியிட்ட நிலையில், தற்போது அனைத்து ஊடகங்களின் கருத்துக்கணிப்பிலும் ரஜினியை விட கமல்ஹாசனுக்கு ஆதரவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
வரும் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன், அதே நாள் மாலையில் மதுரையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அந்நாளில் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)