Posted: Thu,08 Feb 2018 11:45:22 GMT
கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று ஏற்பட்ட சந்திரகிரகணம் சிறப்பான சந்திர கிரகணம் என்றும் மூன்று சிறப்புகள் அதற்கு உண்டு என்றும் சொல்லப்பட்டது. அது என்னவென்றால் கடந்த ஜனவரி 31 அன்று ஏற்பட்ட பவுர்ணமிக்கு ப்ளூ மூன் என்று பெயர், அதே நாளன்று சூப்பர் மூன் எனப்பட்ட நிகழ்வும் அமைந்தது, மேலும் சந்திர கிரணமும் சேர்ந்து சிறப்பாக அமைந்துவிட்டது.
சரி ப்ளூ மூன் என்றால் என்ன? ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்தால் அதை மேலை நாடுகளில் ப்ளூ மூன் என்று சொல்வது வழக்கம், அந்த நாளில் நிலவு நீல வண்ணத்தில் எல்லாம் இருக்காது சும்மா வேறுபாட்டுக்காக சொல்லப்படுவதே இந்த சொல்லாடல்.
அதே போல் சூப்பர் மூன் என்றால், பூமிக்கு சில சமயம் நிலவு அருகில் வரும் நிகழ்வுக்கு சூப்பர் மூன் என்று பெயர், கடந்த 31ம் தேதி நிலவு வழக்கத்தை விடக் குறைவாக அதாவது மூன்று லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். எனவே அன்றைய தினம் சந்திரன் வழக்கத்தை விட 15 சதவிகித அளவுக்குப் பெரிதாகவும் வழக்கத்தை விட 30 சதவிகிதம் கூடுதல் பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும். இந்த நிகழ்வுக்கே சூப்பர் மூன் என்று பெயர்.
  • 0 Comment(s)
Be the first person to like this