பங்குச்சந்தை வீழ்ச்சி ஏன்?: நிதித்துறை செயலர் கருத்து
Posted: Wed,07 Feb 2018 04:58:49 GMT
இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 10 லட்டம் கோடிகள் பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து தெரிவித்திருக்கும் நிதித் துறை செயலர், ஹஷ்முக் ஆதியா, “சர்வதேச பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால், சில நாட்களாக, இந்திய பங்குச் சந்தைகள் சரிவை கண்டுள்ளன. இதற்கு, பட்ஜெட்டில், பங்கு வருவாய்க்கு நீண்ட கால மூலதன வரி விதிக்கப்பட்டது தான், காரணம் என, கூற முடியாது.
இந்த சரிவிலும், அதிகளவில், அன்னிய நிறுவனங்கள் பங்கு முதலீடு மேற்கொண்டதே இதற்கு சான்று. வரி செலுத்துவோர் இடையே, பாரபட்சம் காட்டக் கூடாது என்பதற்காகவே, 14 ஆண்டுகளுக்கு பின், மூலதன ஆதாய வரி மீண்டும் அறிமுகமாகிறது.
கடினமாக உழைத்து மாத ஊதியம் பெறுவோர், வரி செலுத்தும் போது, ஒரு தரப்பினர், பங்கு முதலீட்டில் கிடைக்கும் வருவாய்க்கு வரி செலுத்தாமல் இருப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)