காங்கிரஸை குற்றம் சாட்டிய மோடி
Posted: Wed,07 Feb 2018 04:57:20 GMT
நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மோடி, “ இந்திய வளர்ச்சி குறித்தும், நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு நீங்கள்(எதிர்க்கட்சிகள்) பார்லிமென்ட் கதவை மூடினீர்கள். சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் ஆன பின்னரும், 125 கோடி மக்கள் காங்கிரஸ் செய்த பாவங்களுக்கான தண்டனையை மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர். வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், அவை அனைவரின் நம்பிக்கை பெற்றும் சுமூகமாக நடந்தன. ஆனால், அரசியல் குழப்பத்திற்காக ஆந்திராவை காங்கிரஸ் அவசரகதியில் பிரித்தது. இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.
புதிய மாநிலங்கள் உருவாக்கும்போது, வாஜ்பாய் ஆட்சியில் ஜார்க்கண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது பற்றி நினைவுக்கு வருகிறது. அரசியல் லாபத்திற்காக முடிவு எடுக்கக்கூடாது என்பதை பிரதமர் வாஜ்பாய் செய்து காண்பித்தார். சுயநலத்திற்காக காங்கிரஸ் நாட்டை பிரித்தது. 70 வருடங்களுக்கு முன் தேர்தல் காரணங்களுக்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் நாட்டை காங்கிரஸ் பிரித்தது. காங்கிரசின் சுயநலத்தால் 125 கோடி மக்களும் இன்று அவதிப்படுகின்றனர்.” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)