மோடியை நய்யாண்டி செய்த பிரகாஷ்ராஜ்
Posted: Wed,07 Feb 2018 04:56:23 GMT
சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களுரில் நடைபெற்ற, “பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் நிலை உயரும், உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மாநிலத்தில் செய்யப்படும். மாநிலத்தில் உள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படும்” என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
மோடியின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில், தனது ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பி இருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவையாவன, “பிராமிஸ் டூத்பேஸ்ட் கடந்த 2014-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பல் துலக்க மறந்துவிட்டது. இதனால், விவசாயிகள், இளைஞர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போதும் பிராமிஸ் டூத்பேஸ்டை நம்புகிறீர்களா? கர்நாடகாவில் நேற்று நடந்த பேரணியில் பிராமிஸ் டூத்பேஸ் விற்கப்பட்டதே அதை நம்புகிறீர்களா?, அல்லது அதை வாங்கப்போகிறீர்களா?” என்று பதிவிட்டிருந்தார்.
மோடியின் வாக்குறுதிகளை பிராமிஸ் டூத்பேஸ்ட் என்றும், 2014ம் ஆண்டு செய்த சந்தியங்கள் என்ன ஆனது என்றும் நய்யாண்டி செய்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
  • Share
  • 0 Comment(s)