நிதிநிலை அறிக்கை எதிரொலி: பங்குச்சந்தையில் கடும் சரிவு
Posted: Fri,02 Feb 2018 12:55:44 GMT
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று இந்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கை பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதால் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.
250 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் பெரு நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி குறைக்கப்படுவதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதே போல் பல்வேறு பொருட்கள் மீதான வரி உயர்வும் பங்குச்சந்தையின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. நிப்டி 11,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது.
காலை 10.30 மணியளவில், சென்செக்ஸ் 571.31 புள்ளிகள் சரிந்து ,35,335 புள்ளிகளாகவும், நிப்டி, 182.50 புள்ளிகள் சரிந்து 10,834 புள்ளிகளாகவும் உள்ளன.
  • Share
  • 0 Comment(s)