Posted: Thu,01 Feb 2018 02:44:49 GMT
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி, இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சொல்ல முடியாத அளவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் துன்பம் அனுபவித்து வருவதால், நாடு முழுவதும் மத்திய ஆட்சிக்கு எதிரான அலை தோன்றி இருப்பதால், அதை கவனம் திருப்பும் பொருட்டு, பல கவர்ச்சிகரமான திட்டங்கள் விவசாயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
நிதிநிலை அறிக்கையில், 2018 - 19 ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.22 ஆயிரம் கோடி, மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, உணவு பதப்படுத்துதல் துறை ஒதுக்கீடு ரூ.1,400 கோடியாக உயர்வு, ரூ.1,290 கோடியில் தேசிய மூங்கில் கொள்கை உருவாக்கப்படும். விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் அறிமுகபடுத்தப்படும். என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவையெல்லாம் உண்மையாக விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டமா அல்லது பின்னணியில் கார்பரேட் நிறுவனங்களுக்கான திட்டம் ஏதும் இருக்கிறதா என்பது போகப்போகத்தான் தெரியும்.
  • 0 Comment(s)
Be the first person to like this