Posted: Thu,01 Feb 2018 02:44:10 GMT
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மத்திய நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் இங்கே:
குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. துணைக் குடியரசுத் தலைவரின் சம்பளம் 4 லட்சமாக உயர்வு.
இந்திய முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட் அமைக்கப்படும்.
உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 56 விமான நிலையங்கள் இணைக்கப்படும்.
ஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ஒதுக்கீடு.
அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சிசிடிவி, வைஃபை வசதி வழங்கப்படும்.
எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50% உயர்வு. எஸ்.சி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.56,619 கோடியும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.39,135 கோடியும் ஒதுக்கீடு.
10 கோடி ஏழை குடும்பங்களின் சுகாதாரத்திற்காக தலா ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு. இது உலகின் மிகப்பெரிய மருத்துவத்திட்டம்.
விவசாயிகளின் விளைபொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு நாடு முழுவதும் பிரமாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சிறப்பு நிதி உதவி.
அடுத்த ஒரு வருடத்துக்குள்தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை.
3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு அரசு மருத்துக்கல்லூரி வீதம் 24 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
பிடெக் மாணவர்கள் 1000 பேருக்கு பிஎச்டி படிக்க நிதியுதவி வழங்கப்படும்.
விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
வரும் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ 11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு. அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75,000 கோடி வழங்க முடிவு.
42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்
விவசாய சந்தைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
  • 0 Comment(s)
Be the first person to like this