Posted: Wed,31 Jan 2018 01:37:18 GMT
இன்று முழு சந்திரகிரணம் நிகழ்வதை முன்னிட்டு பல மூட நம்பிக்கைகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், சந்திர கிரகணம் குறித்து தம்ழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய இயக்குனர் சந்திரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர், சந்திரராஜன் கூறியதாவது:ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு, 'புளு மூன்' என, அழைக்கப்படுகிறது.
அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால், இப்படி அழைக்கப்படுகிறது. நிலவு நீல நிறத்தில் தெரியும் எனக் கருத வேண்டாம்; அப்படி இருக்காது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து, இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம். இந்த அபூர்வ சந்திரகிரஹணம், 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடக்கிறது. இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும். இந்தியாவில், இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது.
ஆனால், சென்னையில், சந்திரன் மாலை, 6:05 மணிக்கு உதிக்கும். மாலை, 6:22 முதல், இரவு, 7:38 வரை முழு கிரகணம் இருக்கும். இரவு, 7:39 மணி முதல், நிழல் விலக ஆரம்பித்து, 8:43 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு, 9:38 மணிக்குப்பின் நிலவு, அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல், வெறும் கண்களால் பார்க்கலாம்.
இன்று நடக்கும் சந்திர கிரஹணத்தை சென்னை, கோவை, திருச்சி, வேலுார் ஆகிய அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், பொதுமக்கள் பார்வையிட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this