Posted: Thu,25 Jan 2018 10:24:54 GMT
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, “‛ராமர் ' என்ற பெயருக்கு புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ராமர் என்ற பெயர், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துடனும் தொடர்புடையது அல்ல. பயம், ஊழல், பாரபட்சம் ஆகியவற்றிலிருந்து விடுதலை தருவதே, ராமராஜ்யம். ஹிந்து என்பது, மதம் அல்ல; வாழ்க்கை முறை. அதனால் தான், நம் நாடு, ஹிந்துஸ்தான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this