Posted: Wed,24 Jan 2018 04:43:04 GMT
போக்குவரத்து கட்டணத்தை அதிரடியாக ஏற்றியுள்ளது தமிழக அரசு. இந்த விலையேற்றத்தை கண்டித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கான சலுகைகள் தொடரும் என்பது போன்ற அம்சங்களுடன் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவை இங்கே:
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் (அரசு மற்றும் தனியார் பள்ளி) 100 சதவீதம் இலவச பயண சலுகையின் மூலம் 22 லட்சத்து 66 ஆயிரத்து 483 பயண அட்டைகள் (பஸ் பாஸ்) வழங்கப்பட்டுள் ளன. இந்த சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி, அரசு பாலிடெக் னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 100 சதவீதம் இலவச பயண சலுகையின் மூலம் முறையே 2 லட்சத்து 13 ஆயிரத்து 810, 35 ஆயிரத்து 921, 28 ஆயிரத்து 348 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.
தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 3.21 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையுடன் கூடிய பயண அட்டைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த சலுகையும், பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும்.
மேற்படி பயண அட்டைகளை வழங்குவதற்கு ஆகும் செலவுகளை ஈடு செய்யும் பொருட்டு 2017-18-ம் ஆண்டில் 540.99 கோடி ரூபாயை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கி உள்ளது.
பொதுமக்களுக்கு எழும் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே இருந்த சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளுடன், கூடுதலாக 498 சொகுசு பேருந்துகளை சாதாரண மற்றும் விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றி அமைத்து உள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this