Posted: Thu,18 Jan 2018 02:14:50 GMT
இந்தியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான அக்னி 5 ஏவுகணை, இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை கடந்த ஏப்ரல் 19, 2012 அன்றும், இரண்டாவது சோதனை கடந்த செப்டம்பர் 15, 2013 அன்றும், மூன்றாவது சோதனையானது ஜனவரி 31, 2015 அன்றும், இறுதியாக நான்காம் சோதனை கடந்த டிசம்பர் 26, 2016 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டநிலையில்
இன்று காலை 9.53 மணிக்கு ஒடிசா கடற்கரையில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் வைகையை சேர்ந்த இந்த அக்னி 5 ஏவுகணை 5000 கிலோமீட்டர்கள் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
துப்பாக்கியியில் இருந்து தோட்டா வெளிவருவதைவிட வேகமாக செல்லும் இந்த அக்னி 5 ஏவுகணையை, வழிமறித்து தாக்குவதும், ரேடார்களால் கண்டுபிடிப்பதும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை வைத்திருகுக்ம் நான்காவது நாடு இந்தியாவாகும்.
  • 0 Comment(s)
Be the first person to like this