கமல்ஹாசன் அதிரடி அரசியல் பயணம்
Posted: Sat,13 Jan 2018 06:28:16 GMT
சில மாதங்களுக்கு முன்பே தன்னுடைய அரசியல் குறித்து தெளிவாக அறிவித்துவிட்ட கமல்ஹாசன், இடையே விஸ்வரூபம் படப்பணிகளுக்காக அரசியலுக்கு இடைவெளிவிட்ட கமல், தற்போது மீண்டும் பரபரப்பான அரசியல் கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்.
ட்விட்டரில் அரசியல் செய்கிறார் என்று கமல் குறித்து அரசியல் கட்சிகள் குறை கூறிவரும் நிலையில், அதிரடியாக தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார கமல்ஹாசன்.
குடியரசு தினமான ஜனவரி 26 முதல் தன் பயணத்தை தொடங்கும் கமல், தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி என தன் பயணத்தை விரிவு படுத்த உள்ளார். அதற்கான வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
  • Share
  • 0 Comment(s)