Posted: Sat,13 Jan 2018 06:26:16 GMT
மெர்சல் படம் வெளியான போது அப்படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்தும், மருத்துவ துறை குறித்தும் சில சர்ச்சைக்குறிய வசனங்கள் இடம்பெற்றிருந்தது. அந்த வசனங்கள் ஏற்படுத்திய சர்ச்சையால் படத்துக்கு எதிர்மறை விளம்பரம் கிடைத்தது.
இந்நிலையில் சில நாட்கள் முன்பு பிரபல வாரப்பத்திரிக்கை நடத்திய விழாவில் கலந்து கொண்ட விஜய், சர்ச்சைக்குறிய வசனங்களை தான் தெரிந்தேதான் பேசினேன் என்று தெரிவித்துள்ளார்.
அவ்விழாவில் பேசிய விஜய், “மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சை ஏற்படும் என தெரிந்து தான் சர்ச்சைக்குரிய வசனத்தை பேசினேன்,” எனவும், “அதற்கான அவசியம் இருப்பதால் தான் இந்த வசனத்தை நான் பேசினேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this