”இதை நான் எதிர்பார்த்தேன்”, ப.சிதம்பரம் பேட்டி
Posted: Sat,13 Jan 2018 06:24:39 GMT
முன்னள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்திக் சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளனர். இச்சோதனைகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “ சென்னை உட்பட பல பகுதிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறையினரும் ஏற்கனவே மூன்று முறை சோதனை நடத்தி விட்டன. சோதனை முழுக்க முழுக்க நாடகமே. அமலாக்கத்துறையின் இந்த நாடகத்தை ஏற்கனவே எதிர்பார்த்தேன்.
கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் குற்றம் ஏதுமில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)