தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டியது ஏன்? மூத்த நீதிபதி விளக்கம்
Posted: Sat,13 Jan 2018 06:14:58 GMT
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், குற்றம் சாட்டிய நான்கு நீதிபதிகளில் ஒருவரன குரியன் ஜோசஃப் கேரள மாநிலம் காலடியில் இன்று தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்பேட்டியில், தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டியது ஏன் என்பது குறித்து தெரிவித்த அவர், “நீதி மற்றும் நீதித்துறை நலனுக்காக மட்டுமே நாங்கள் செயல்பட்டோம். இதனை தான் நாங்கள் நேற்று டில்லியில் கூறினோம். இந்த விஷயத்தில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை.நீதித்துறையில் உள்ளவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டவே நீதிபதிகள் பேட்டி கொடுத்தனர்.
நாங்கள் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. எங்களது நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும். நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)