விரைவில் தீபிகா படுகோன் திருமணம்
Posted: Sat,13 Jan 2018 04:58:53 GMT
தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல காதல் ஜோடிகளில் தீபிகா – ரன்வீர் ஜோடியும் ஒன்று. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம்.
தீபிகா படுகோன் சமீபத்தில் தன்னுடைய 32வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். இந்த பிறந்தாள் கொண்டாட்டத்தில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இப்பிறந்தாள் விழாவில் தீபிகாவுக்கு, ரன்வீர் சிங் விலையுயர்ந்த மோதிரம் ஒன்றை அணிவித்துள்ளார். இதனால் இவ்விழா தீபிகாவின் பிறந்தநாள் விழா மட்டுமல்ல. தீபிகா – ரன்வீர் ஆகியோரது நிச்சயதார்த்த விழா என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இச்செய்திகளை நிரூபிக்கும் வகையில், இருவரும் இணைந்து மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் புதிய பங்களாக்களை வாங்கியுள்ளனர். விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)