ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்
Posted: Sat,13 Jan 2018 04:55:02 GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை தங்கள் சாதனையாக திமுக சொல்லிவருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபையில், ஸ்டாலின் பேசுகையில், பா.ம.க., சாதனைகளை, தி.மு.க., செய்ததாக பட்டியலிட்டு மகிழ்ந்திருக்கிறார். சட்டசபையில், பா.ம.க., இல்லாததை பயன்படுத்தி, அதன் சாதனைகளை சொந்தம் கொண்டாடியது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசில், தி.மு.க., இருந்த போது சாதித்த திட்டங்கள் எனக் கூறி, ஒரு பட்டியலை படித்துள்ளார். அதில், 'சென்னை, தாம்பரத்தில், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது; சேலம், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 120 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்பட்டது. 'மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது ஆகியவை, தி.மு.க., படைத்த சாதனைகள்' என, ஸ்டாலின் கூறியிருக்கிறார். இவையெல்லாம், பா.ம.க., சாதனைகள் என்பதை, ஸ்டாலின் வரலாற்றை படித்து, அறிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)