உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகார்: ராகுல் காந்தி கோரிக்கை
Posted: Sat,13 Jan 2018 04:54:22 GMT
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் புகார் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜனநாயகத்திற்கு ஆபத்து என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும். நீதிபதி லோயா விவகாரத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். நீதிபதி லோயா இறப்பு குறித்து உயர்மட்ட அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)