”இரண்டில் ஒன்று நடக்கும்”, சொல்கிறார் வித்யா பாலன்
Posted: Sat,13 Jan 2018 04:53:31 GMT
நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளில் அதிகம் நடிப்பவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க உள்ளார். பிரபல எழுத்தாளர் சகாரியா கோஷ் எழுதிய “இந்திரா – இண்டியாஸ் மோஸ்ட் பவர்ஃபுல் ப்ரைம் மினிஸ்டர்” என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு இப்படம் தயாராக உள்ளது.. இப்புத்தகத்தின் உரிமையை முறைப்படி வாங்கி இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படம் குறித்து தெரிவித்திருக்கும் வித்யா பாலன், “சகாரியா கோஷின் "இந்திரா" புத்தகத்தின் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திராவாக நடிக்க நான் எப்போதும் விரும்பியது உண்டு. இந்த புத்தகத்தை மையமாக வைத்து, படமாக உருவாக்கலாமா அல்லது வெப்சிரீஸாக உருவாக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இரண்டில் ஒன்று நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)