ஹெச்.ராஜாவுக்கு ஸ்டாலின் கண்டனம்
Posted: Sat,13 Jan 2018 04:52:24 GMT
கவிஞர் வைரமுத்துவை, பாஜகவின் ஹெச்.ராஜ தரம் தாழ்ந்து விமர்சித்தது குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அநாகரீகத்திற்கும், வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளை தெரிவிக்கின்றனர் ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும். “ கடந்த ஒரு வாரமாக வைரமுத்து குறித்த அவதூறான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றனர். தான் ஆண்டாள் பற்றி புண்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என்று வைரமுத்து விளக்கம் அளித்த பின்னரும் அவர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருவது கண்டனத்துக்கு உரியது” என்றும் அவர் கூறியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)