கமல்ஹாசனின் பொங்கல் வாழ்த்து
Posted: Sat,13 Jan 2018 07:13:34 GMT
ட்விட்டர் தளத்தை முழுமையாக பயன்படுத்தி வரும் திரை பிரபலன்களில் கமல்ஹாசனும் ஒருவர். திரைப்படம் தொடர்பான செய்திகளைவிட அரசியல் கருத்துக்களையே அதிகம் பதிவிட்டு வருகிறார் கமல்ஹாசன். ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை கிளம்ப்பி இருந்தது ஞாபகம் இருக்கலாம்.
இந்நிலையில் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.” என்று பதிவிட்டுள்ளார்.
’இனி விதைப்பது நற்பயிராகட்டும்’ என்று தெரிவித்ததன் மூலம், பொங்கல் வாழ்த்திலும் தமிழ்நாட்டின் அரசியல் குறித்து தன் கருத்தை பதிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.
  • Share
  • 0 Comment(s)