ஸ்கெட்ச் முதல்நாள் வசூல் எவ்வளவு?
Posted: Sat,13 Jan 2018 07:06:38 GMT
விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் நேற்று வெளியாகி இருக்கும் படம் ஸ்கெட்ச். அதிரடி ஆக்சன் படமாக வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பி மற்றும் சி பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் முதல் நாளில் 90 லட்சம் வசூல் செய்துள்ள இப்படம், தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து இரண்டு கோடியே 60 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.
பெரு நகரங்களுக்கு இணையாக தமிழ்நாட்டின் உட்பகுதிகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது இப்படம்.
  • Share
  • 0 Comment(s)