நாச்சியார் வெளியீடு எப்போது?
Posted: Fri,12 Jan 2018 03:18:15 GMT
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் நாச்சியார். பாலா இயக்கத்தில் உருவான படங்களிலேயே மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட படம் இதுதான், இப்படத்தை சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. பொதுவாகவே பாலா படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் ஜோதிகா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதும், ஜிவி பிரகாஷ் துடுக்குத்தனமான பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் இம்முன்னோட்டத்தில் ஜோதிகா பேசிய ஒரு வசனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, படத்துக்கு எதிர்மறை விளம்பரமாக அமைந்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)