Posted: Fri,12 Jan 2018 03:16:15 GMT
துருவங்கள் 16 படம் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் கார்திக் நரேன். 2016 டிசம்பர் மாதம் வெளியான துருவங்கள் 16 படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கௌதம் மேனன் தயாரிப்பில், அரவிந்த் சாமியை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தது.
கௌதம் மேனன் தயாரிப்பில், அரவிந்த்சாமி நடிப்பில் தற்போது நரகாசூரன் படத்தை இயக்கி வரும் கார்திக் நரேன் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்” என்று பதிவிட்டுள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this